| [00:00.000] |
作词 : Vairamuthu |
| [00:01.000] |
作曲 : Raghu Dixit/Various Artists/D. Imman |
| [00:33.040] |
அன்பே அன்பே கொல்லாதே |
| [00:37.160] |
கண்ணே கண்ணை கிள்ளாதே |
| [00:41.260] |
பெண்ணே புன்னகையில் இதயத்தை வெடிக்காதே |
| [00:49.230] |
ஐயோ உன்னசைவில் உயிரைக் குடிக்காதே |
| [00:57.030] |
அன்பே அன்பே கொல்லாதே |
| [01:00.840] |
கண்ணே கண்ணை கிள்ளாதே |
| [01:35.970] |
பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன் |
| [01:39.900] |
அடடா பிரம்மன் கஞ்சனடி |
| [01:43.810] |
சற்றே நிமிர்ந்தேன் தலைசுற்றிப் போனேன் |
| [01:48.140] |
ஆஹா அவனே வள்ளலடி |
| [01:51.770] |
மின்னலைப் பிடித்துத் தூரிகை சமைத்து |
| [01:55.630] |
ரவிவர்மன் எழுதிய வதனமடி |
| [01:59.630] |
நூறடிப் பளிங்கை ஆறடியாக்கிச் |
| [02:03.800] |
சிற்பிகள் செதுக்கிய உருவமடி |
| [02:07.670] |
இதுவரை மண்ணில் பிறந்த பெண்ணில் |
| [02:11.570] |
நீதான் நீதான் அழகியடி |
| [02:15.490] |
இத்தனை அழகும் மொத்தம் சேர்ந்து |
| [02:19.620] |
என்னை வதைப்பது கொடுமையடி |
| [02:23.500] |
அன்பே அன்பே கொல்லாதே |
| [02:27.440] |
கண்ணே கண்ணை கிள்ளாதே |
| [02:47.130] |
கொடுத்து வைத்தப் பூவே பூவே |
| [02:50.670] |
அவள் கூந்தல் மணம் சொல்வாயா? |
| [02:55.010] |
கொடுத்து வைத்த நதியே நதியே |
| [02:58.540] |
அவள் குளித்தச் சுகம் சொல்வாயா? |
| [03:03.010] |
கொடுத்து வைத்த கொலுசே |
| [03:06.930] |
கால் அழகைச் சொல்வாயா? |
| [03:10.860] |
கொடுத்து வைத்த மணியே |
| [03:14.710] |
மார் அழகைச் சொல்வாயா? |
| [03:33.950] |
அழகிய நிலவில் oxygen நிரப்பி |
| [03:37.890] |
அங்கே உனக்கொரு வீடு செய்வேன் |
| [03:41.890] |
உன்னுயிர் காக்க என்னுயிர் கொண்டு |
| [03:46.100] |
உயிருக்கு உயிரால் உறையிடுவேன் |
| [03:53.710] |
மேகத்தைப் பிடித்து மெத்தைகள் அமைத்து |
| [03:57.620] |
மெல்லிய பூ உன்னைத் தூங்க வைப்பேன் |
| [04:01.590] |
தூக்கத்தில் மாது வேர்க்கின்ற போது |
| [04:05.820] |
நட்சத்திரம் கொண்டு நான் துடைப்பேன் |
| [04:09.510] |
பால் வண்ணப் பறவை குளிப்பதற்காக |
| [04:13.530] |
பனித்துளி எல்லாம் சேகரிப்பேன் |
| [04:17.370] |
தேவதை குளித்த துளிகளை அள்ளி |
| [04:21.470] |
தீர்த்தம் என்றே நான் குடிப்பேன் |
| [04:25.420] |
அன்பே அன்பே கொல்லாதே |
| [04:33.300] |
அன்பே அன்பே கொல்லாதே |
| [04:37.170] |
கண்ணே கண்ணை கிள்ளாதே |
| [04:41.210] |
பெண்ணே புன்னகையில் இதயத்தை வெடிக்காதே |
| [04:48.770] |
ஐயோ உன்னசைவில் உயிரைக் குடிக்காதே |
| [04:57.010] |
அன்பே அன்பே கொல்லாதே |
| [05:00.850] |
கண்ணே கண்ணை கிள்ளாதே |
| [05:32.020] |
|