| [00:19.36] |
ஒரு நாளில் வாழ்க்கை இங்கே எங்கும் ஓடி போகாது |
| [00:25.26] |
மறு நாளும் வந்து விட்டால் துன்பம் தேயும் தொடராது |
| [00:30.81] |
எத்தனை கோடி கண்ணீர் மண் மீது விழுந்திருக்கும் |
| [00:37.69] |
அத்தனை கண்ட பின்னும் பூமி இங்கு பூ பூக்கும் |
| [00:45.83] |
கரு வாசல் விட்டு வந்த நாள் தொட்டு |
| [00:51.32] |
ஒரு வாசல் தேடியே விளையாட்டு |
| [00:57.27] |
கண் திறந்து பார்த்தால் பல கூத்து |
| [01:03.12] |
கண்மூடி கொண்டால் ... |
| [01:56.19] |
|
| [02:18.94] |
போர் களத்தில் பிறந்து விட்டோம் வந்தவை போனவை வருத்தம் இல்லை |
| [02:24.95] |
காட்டினிலே வாழ்கின்றோம் முட்களின் வலி ஒன்றும் மரணம் இல்லை |
| [02:30.83] |
இருட்டினிலே நீ நடக்கையிலே உன் நிழலும் உன்னை விட்டு விலகி விடும் |
| [02:36.69] |
நீ மட்டும் தான் இந்த உலகத்திலே உனக்கு துணை என்று விளங்கி விடும் |
| [02:42.89] |
தீயோடு போகும் வரையில் தீராது இந்த தனிமை |
| [02:55.19] |
கரை வரும் நேரம் பார்த்து கப்பலில் காத்திருப்போம் |
| [03:01.66] |
எரிமலை வந்தால் கூட ஏறி நின்று போர் தொடுப்போம் |
| [03:09.36] |
அந்த தெய்வ ரகசியம் புரிகிறதே |
| [03:15.23] |
இங்கு எதுவும் நிலை இல்லை கரைகிறதே |
| [03:21.34] |
மனம் வெட்ட வெளியிலே அலைகிறதே |
| [03:27.84] |
அந்த கடவுளை கண்டால்... |
| [03:52.93] |
|
| [04:25.62] |
அது எனக்கு இது உனக்கு இதயங்கள் போடும் தனி கணக்கு |
| [04:31.27] |
அவள் எனக்கு இவள் உனக்கு உடல்களும் போடும் புதிர் கணக்கு |
| [04:37.18] |
உனக்கும் இல்லை இது எனக்கும் இல்லை படைத்தவனே இங்கு எடுத்து கொள்வான் |
| [04:43.71] |
நல்லவன் யார் அட கெட்டவன் யார் கடைசியில் அவனே முடிவு செய்வான் |
| [04:49.94] |
பழி போடும் உலகம் இங்கே? பலியான உயிர்கள் எங்கே? |
| [05:01.51] |
உலகத்தின் ஓரம் நின்று அத்தனையும் பார்த்திருப்போம் |
| [05:07.98] |
நடப்பவை நாடகம் என்று நாமும் சேர்ந்து நடித்திருப்போம் |
| [05:15.86] |
பல முகங்கள் வேண்டும் சரி மாட்டி கொள்வோம் |
| [05:21.87] |
பல திருப்பம் தெரியும் அதில் திரும்பி கொள்வோம் |
| [05:28.07] |
கதை முடியும் போக்கில் அதை முடித்து கொள்வோம் |
| [05:34.13] |
மறு பிறவி வேண்டுமா... |
| [05:40.13] |
|