[00:19.36] ஒரு நாளில் வாழ்க்கை இங்கே எங்கும் ஓடி போகாது [00:25.26] மறு நாளும் வந்து விட்டால் துன்பம் தேயும் தொடராது [00:30.81] எத்தனை கோடி கண்ணீர் மண் மீது விழுந்திருக்கும் [00:37.69] அத்தனை கண்ட பின்னும் பூமி இங்கு பூ பூக்கும் [00:45.83] கரு வாசல் விட்டு வந்த நாள் தொட்டு [00:51.32] ஒரு வாசல் தேடியே விளையாட்டு [00:57.27] கண் திறந்து பார்த்தால் பல கூத்து [01:03.12] கண்மூடி கொண்டால் ... [01:56.19] [02:18.94] போர் களத்தில் பிறந்து விட்டோம் வந்தவை போனவை வருத்தம் இல்லை [02:24.95] காட்டினிலே வாழ்கின்றோம் முட்களின் வலி ஒன்றும் மரணம் இல்லை [02:30.83] இருட்டினிலே நீ நடக்கையிலே உன் நிழலும் உன்னை விட்டு விலகி விடும் [02:36.69] நீ மட்டும் தான் இந்த உலகத்திலே உனக்கு துணை என்று விளங்கி விடும் [02:42.89] தீயோடு போகும் வரையில் தீராது இந்த தனிமை [02:55.19] கரை வரும் நேரம் பார்த்து கப்பலில் காத்திருப்போம் [03:01.66] எரிமலை வந்தால் கூட ஏறி நின்று போர் தொடுப்போம் [03:09.36] அந்த தெய்வ ரகசியம் புரிகிறதே [03:15.23] இங்கு எதுவும் நிலை இல்லை கரைகிறதே [03:21.34] மனம் வெட்ட வெளியிலே அலைகிறதே [03:27.84] அந்த கடவுளை கண்டால்... [03:52.93] [04:25.62] அது எனக்கு இது உனக்கு இதயங்கள் போடும் தனி கணக்கு [04:31.27] அவள் எனக்கு இவள் உனக்கு உடல்களும் போடும் புதிர் கணக்கு [04:37.18] உனக்கும் இல்லை இது எனக்கும் இல்லை படைத்தவனே இங்கு எடுத்து கொள்வான் [04:43.71] நல்லவன் யார் அட கெட்டவன் யார் கடைசியில் அவனே முடிவு செய்வான் [04:49.94] பழி போடும் உலகம் இங்கே? பலியான உயிர்கள் எங்கே? [05:01.51] உலகத்தின் ஓரம் நின்று அத்தனையும் பார்த்திருப்போம் [05:07.98] நடப்பவை நாடகம் என்று நாமும் சேர்ந்து நடித்திருப்போம் [05:15.86] பல முகங்கள் வேண்டும் சரி மாட்டி கொள்வோம் [05:21.87] பல திருப்பம் தெரியும் அதில் திரும்பி கொள்வோம் [05:28.07] கதை முடியும் போக்கில் அதை முடித்து கொள்வோம் [05:34.13] மறு பிறவி வேண்டுமா... [05:40.13]