[00:14.72] ஆரிரோ, ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு [00:21.24] பூமியே புதிதானதே இவள் மழலையின் மொழி கேட்டு [00:27.76] ஓ தாயாக தந்தை மாறும் புது காவியம் [00:34.17] ஓ இவன் வரைந்த கிறுக்கலில் இவளோ உயிரோவியம் [00:41.09] இரு உயிர் ஒன்று சேர்ந்து இங்கு ஓருயிர் ஆகுதே [00:47.98] கருவறை இல்லை என்றபோதும் சுமந்திடத் தோணுதே [00:56.02] விழியோரம் ஈரம் வந்து குடை கேட்குதே [01:02.52] ஆரிரோ, ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு [01:09.48] பூமியே புதிதானதே இவள் மழலையின் மொழி கேட்டு [01:16.48] [02:01.48] முன்னம் ஒரு சொந்தம் வந்து மழையானதே [02:08.10] மழை நின்று போனால் என்ன மரம் தூறுதே [02:14.91] வயதால் வளர்ந்தும் இவன் பிள்ளையே [02:21.76] பிள்ளை போல் இருந்தும் இவள் அன்னையே [02:28.53] இதுபோல் ஆனந்தம் வேறில்லையே [02:34.17] இரு மனம் ஒன்று சேர்ந்து இங்கே மௌனத்தில் பேசுதே [02:41.13] ஒருநொடி போதும்-போதும் என்று ஓர்குரல் கேட்குதே [02:49.15] விழியோரம் ஈரம் வந்து குடை கேட்குதே [02:55.65] ஆரிரோ, ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு [03:02.58] பூமியே புதிதானதே இவள் மழலையின் மொழி கேட்டு [03:09.11] [03:57.77] கண்ணாடிக்கு பிம்பம் அதை இவள் காட்டினாள் [04:04.66] கேட்காத ஓர் பாடல் அதில் இசை மீட்டினாள் [04:11.57] அடடா தெய்வம் இங்கே வரமானதே [04:18.27] அழகாய் வீட்டில் விளையாடுதே [04:25.22] அன்பின் விதை இங்கே மரமானதே [04:30.71] கடவுளை பார்த்ததில்லை இவளது கண்கள் காட்டுதே [04:37.65] பாசத்தின் முன்பு இன்று உலகின் அறிவுகள் தோற்குதே [04:45.75] விழியோரம் ஈரம் வந்து குடை கேட்குதே [04:52.38] ஆரிரோ, ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு [04:58.76] பூமியே புதிதானதே இவள் மழலையின் மொழி கேட்டு [05:06.19]