நெஞ்சுக்குள் நூறு ஆசைகள் தோணுதே யாரைக் கேட்பேன் நான். பஞ்சுக்குள் தீயை பார்வைகள் வேகுதே நீரை ஊற்று நீ உன்னை பார்த்த தினம் ஊஞ்சல் ஆடும் மனம் சொல்லாத காதல் நீ சொல்வாயோ அதை நீ பாதி கண்களால் பார்த்தேன் உனை நான் யாரோ யார் இவளோ அட காதலுக்கு கட்டுப்பாடு எதுவோ அது கண்கள் ரெண்டை சாத்திவிட்ட கிலோ காதல் என்னும் போதைக்குள்ளே விழுந்தால் ஒருபோதும் தூங்க மாட்டேன் உயிரோடு இருந்தால் எனக்கும் இதுபோல் நிலைமை வருமோ வந்தாலும் என் வாழ்க்கை வானவில் நிறமோ இதற்கும் பயந்தால் எதுதான் நடக்கும் கண்ணாலே பார்த்ததுமே காதல் சொல்லிவிடு நான்கு ஆண்டு காதலித்த உணர்வோ அது நித்தம் நித்தம் என்னை சுற்றும் நினைவோ மஞ்சள் மாலை நேரம் வந்தால் மயக்கம் மனசார காதல் சொல்ல எனக்கென்ன தயக்கம் ஓ பகலில் முழுதும் பழகும் நிலவே நீயில்லா நேரத்தில் என் ஜீவன் தொலைவே துணையாய் இருந்தால் தனிமை மறப்பேன் நீயாக நானிருக்க நானும் காத்திருப்பேன் உன் முகம் பார்த்து காதலை சொல்லவே காத்திருந்தேன் நான் என்னிடம் உந்தன் காதலை சொல்லடி ஏங்கி நின்றேன் நான். நீ காதல் சொன்ன தினம் ஆடி பாடும் மனம் பக்கத்தில் வருவாய் பதில் ஒன்றை தருவாய்